பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படத்தில் அவரது முகத்தில் காயங்கள் இருப்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பிரியங்கா சோப்ரா புதன்கிழமை காலை தனது காயம் பட்ட முகத்தின் படத்தைப் பகிர்ந்துக் கொண்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் பிரியங்காவின் உடல்நிலை குறித்து கவலையடைந்துள்ளனர். அவர் தற்போது தனது முதல் வெப் சீரிஸான சிட்டாடலின் படப்பிடிப்பில் இருக்கிறார்.
காயத்துடன் படத்தைப் பகிர்ந்த பிரியங்கா, வேலையில் கடினமான தருணம் இருக்கிறதா என்று ரசிகர்களிடம் கேட்டார். அவரின் அந்த கேள்வி படப்பிடிப்பில் பிரியங்காவுக்கு ஏதேனும் காயம் பட்டதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் அது சிட்டாடல் வலை தொடருக்கான மேக்கப்பாக இருக்கும் எனவும் சிலர் நம்புகிறார்கள்.
மகள்களுக்காக காத்திருக்கிறேன்.. மறுமணத்திற்கு பின் டி.இமான் உருக்கம்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
படத்தில் கறுப்பு நிற டாப் மற்றும் நீல நிற ஐ ஷேடோவில் தோற்றமளிக்கிறார் பிரியங்கா. இருப்பினும், அவரது மூக்கின் கீழ், உதடுகள் மற்றும் கன்னம் ஆகியவற்றில் ரத்த காயங்கள் இருக்கின்றன. ஜனவரி மாதம் மகள் மால்டி மேரி சோப்ரா ஜோனாஸை வாடகைத்தாய் மூலம் பெற்ற பிரியங்கா, சமீபத்தில் தனது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். கடந்த ஆண்டு டிசம்பரில் சிட்டாடலின் முந்தைய லண்டன் அட்டவணையை அவர் முடித்திருந்தார். தற்போது மீண்டும் அதன் ஷூட்டிங்கில் அவர் கலந்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.