• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குடும்பப் பெயரை நீக்கிய பிரியங்கா சோப்ரா... கணவர் நிக் ஜோனாஸை பிரிகிறாரா?

குடும்பப் பெயரை நீக்கிய பிரியங்கா சோப்ரா... கணவர் நிக் ஜோனாஸை பிரிகிறாரா?

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

பிரியங்கா மற்றும் நிக் டிசம்பர் மாதம் தங்கள் மூன்றாம் ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடவுள்ளனர்.

  • Share this:
    நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் தனது பெயரிலிருந்து 'ஜோனாஸ்'-ஐ நீக்கியுள்ளார்.

    கடந்த வாரம், நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் இருந்து தனது குடும்பப்பெயரான ஜோனஸை நீக்கினார். இது அவரது திருமணம் குறித்த ஊகங்களுக்கு வழி வகுத்த நிலையில், பிரியங்காவின் தாயார் மது சோப்ரா அந்த வதந்திகளை நிராகரித்துள்ளார்.

    இது குறித்து நியூஸ் 18-ற்கு பேட்டியளித்த பிரியங்காவின் தாயார் மது சோப்ரா, "இது எல்லாம் குப்பை, இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்றார். சமூகவலைதளங்களில் இருந்து தனது குடும்பப்பெயரை நீக்கினாலும், பிரியங்கா தனது அன்பையும் ஆதரவையும் கணவர் நிக்கிற்கு அளித்து வருகிறார். 2018-ம் ஆண்டு நிக் ஜோனாஸுடன் திருமணம் ஆன பிறகு ஜோனாஸ் என்ற குடும்ப பெயரை தன்னுடன் இணைத்துக் கொண்டார் பிரியங்கா.



     




    View this post on Instagram





     

    A post shared by Priyanka (@priyankachopra)






    கடந்த வாரம், பெயர் மாற்றத்திற்குப் பிறகு, தம்பதியரின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் தீபாவளி பார்ட்டியில் எடுக்கப்பட்ட ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்தார். பிரியங்கா மற்றும் நிக் டிசம்பர் மாதம் தங்கள் மூன்றாம் ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடவுள்ளனர். இந்த ஜோடி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்தியாவில் திருமணம் செய்துக் கொணடனர். இந்து, கிறிஸ்டியன் என இரு திருமணங்களைச் செய்த நிலையில், அதன் பிறகு அவர்கள் பல வரவேற்புகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    தவிர, நடிகை சமந்தாவும் இதேபோல் தனது குடும்பப் பெயரை முதலில் நீக்கினார். இதையடுத்து கணவர் நாகசைத்தன்யாவை அவர் பிரிவதாக தகவல்கள் வெளியான நிலையில், இறுதியில் அதுவே உண்மையானது. தற்போது பிரியங்காவின் விஷயத்தில் அப்படி ஏதாவது நடந்து விடுமோ என்ற சிந்தனையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: