Home /News /entertainment /

வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்த பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி

வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்த பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி

தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற ஒரே படத்தில் மட்டும் பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார். இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த பிரியங்கா சோப்ரா, பின்னர் ஹாலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறினார்.

    உலகளவில் பிரபலமாக இருந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    இதுதொடர்பாக பிரியங்கா சோப்ரா தனது இஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

    வாடகைத் தாய் மூலம் குழந்தையை வரவேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்களது இந்த சிறப்பான நேரத்தில் எங்களது தனியுரிமைக்கு (Privacy)மதிப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த தருணங்களை நானும் எனது கணவரும் குடும்பத்துடன் கழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
    இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

    View this post on Instagram

    A post shared by Priyanka (@priyankachopra)

    பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரபல நடிகைகள் லாரா தத்தா, கேத்ரினா கைப், நடிகர் பர்கான் அக்தர் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க : ரோமியோ ஜுலியட் இயக்குனரின் புதிய பட ஹீரோ யார் தெரியுமா?

    பிரியங்காவும், நிக் ஜோனசும் கடந்த 2017-ல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாக சந்தித்தனர். பின்னர் நடந்த சந்திப்புகளில் காதல் மலர, இருவரும் 2018-ல் லண்டனில் திருமணம் முடித்துக் கொண்டனர்.

    தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற ஒரே படத்தில் மட்டும் பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார். இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த பிரியங்கா சோப்ரா, பின்னர் ஹாலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறினார்.

    இதையும் படிங்க : ஆர்யாவின் கேப்டன் படம் குறித்த புதிய அப்டேட்!

    தற்போது சிட்டாடெல் என்ற வெப் சீரிஸில் பிரியங்கா நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் இத்தாலலி, மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அமேசான் பிரை நிறுவனம் தயாரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தயாரித்த ஒய்ட் டைகர் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இந்த படம் பிரபல எழுத்தாளர் அரவிந்த் அதிகாவின் புக்கர் பரிசை வென்ற நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. மேட்ரிக்ஸ் 4 ஹாலிவுட் படத்திலும் முக்கிய கேரக்டரில் பிரியங்கா நடித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Priyanka Chopra

    அடுத்த செய்தி