• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புது வீட்டில் பிரியங்கா சோப்ரா... ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய அந்த ஸ்பெஷல் ஃபோட்டோ!

புது வீட்டில் பிரியங்கா சோப்ரா... ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய அந்த ஸ்பெஷல் ஃபோட்டோ!

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

2018-ல் நிக் மற்றும் பிரியங்கா கிறிஸ்தவ மற்றும் இந்து முறைகளின் படி திருமணம் செய்துக் கொண்டனர்.

  • Share this:
    நடிகை பிரியங்கா சோப்ரா தீபாவளியை முன்னிட்டு சில படங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது கணவரும் பாப்-ஸ்டார் நடிகருமான நிக் ஜோனாஸும் பண்டிகை உற்சாகத்தில் திளைத்திருந்தனர். பாரம்பரிய குர்தா மற்றும் பைஜாமாவில் காணப்பட்டார் நிக்.

    பிரியங்காவும் நிக்கும் அவர்களின் அற்புதமான தீபாவளி கொண்டாட்டப் படங்களில் சிறந்த ஜோடியாகத் தெரிந்தனர். அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பிரியங்கா, “எங்கள் முதல் வீட்டில் நாங்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடும் முதல் தீபாவளி. இது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாலை நேரம் மிகவும் சிறப்பாக அமைய உழைத்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் என் தேவதைகள். ஆடை அணிவது மட்டுமல்லாமல், இரவு முழுவதும் நடனமாடுவதன் மூலம், நான் வீட்டிற்கு திரும்பி வந்ததைப் போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தி, எங்கள் வீட்டையும் எனது கலாச்சாரத்தையும் கௌரவித்த அனைவருக்கும் நன்றி.

    கனவுகளால் உருவாக்கப்பட்ட என் சிறந்த கணவர் நிக் ஜோனஸ், ஐ லட் யூ... என் இதயம் மிகவும் நன்றியுடன் நிரம்பியதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

    ஐவெரி லெஹங்காவில் பிரியங்கா அழகாக இருந்தார். ஒரு படத்தில், அழகான ஜோடி தங்கள் திருமணத்தின் நினைவுச்சின்னம் முன்பு போஸ் கொடுத்திருந்தனர். இது அவர்களின் திருமண கத்பந்தன் (மணமகள் சேலையின் ஓரத்தையும், மணமகனின் துண்டின் ஓரத்தையும் முடிச்சு போடுவது). 2018-ல் நிக் மற்றும் பிரியங்கா கிறிஸ்தவ மற்றும் இந்து முறைகளின் படி திருமணம் செய்துக் கொண்டனர்.




    காத்பந்தன் மணமகனும், மணமகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு புனித பந்தத்தில் இணைவதைக் குறிக்கிறது. இதனை ஃப்ரேம் செய்து தங்கள் புதிய வீட்டில் வைத்திருக்கிறார்கள் பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: