• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Priyanka Chopra: ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் கோடிகளில் சம்பாதிக்கும் பிரியங்கா சோப்ரா!

Priyanka Chopra: ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் கோடிகளில் சம்பாதிக்கும் பிரியங்கா சோப்ரா!

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இன்ஸ்ட்ராகிராமில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 100 பேரில் யுஎஸ்ஸைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பாடகர்களே அதிகம் இடம் பிடித்துள்ளனர்.

  • Share this:
    சாதாரண மக்கள் பரஸ்பரம் சண்டையிட்டு, திட்டு வாங்கும் சமூகவலைதளத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு பிரபலங்கள் கோடிகளில் பணம் வாங்குகிறார்கள்.

    இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் பிரபலங்கள் தங்களின் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய வியாபார நிறுவனங்கள் இந்தத் தொகையை வழங்குகின்றன. 2021-ல் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதித்தவர் பட்டியலில் 27-வது இடத்தில் ப்ரியங்கா சோப்ரா உள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை Hopper HQ இணையதளம் வருடா வருடம் வெளியிட்டு வருகிறது. இந்த வருட பட்டியலில் முதலிடத்தில் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ உள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 29.5 கோடி பேர் ஃபாலோ செய்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போடுவதற்கு இவர் ஒரு கோடியே அறுபது லட்சம் யுஎஸ் டாலர்கள் பெறுகிறார். இரண்டாவது இடத்தில் ஹாலிவுட் நடிகர் ட்வெய்னி ஜான்சன் உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் பட்டியலில் 19-வது இடத்தில் இந்தியாவின் கிரிக்கெட் வீரர் வீராத் கோலி இடம்பிடித்துள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 12.5 கோடி பேர் ஃபாலோ செய்கிறார்கள். ஒரு போஸ்டுக்கு இவர் சுமார் 5 கோடிகள் பெறுகிறார். 27-வது இடத்தில் இருக்கும் ப்ரியங்கா சோப்ராவை 6.4 கோடி பேர் ஃபாலோ செய்கிறார்கள். இவர் ஒரு போஸ்டுக்கு சுமார் 3 கோடிகள் வாங்குகிறார். இவருக்குப் பிறகே கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆகியோர் வருகிறார்கள்.

    இன்ஸ்டகிராமில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 100 பேரில் யுஎஸ்ஸைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பாடகர்களே அதிகம் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இரண்டே பேர், வீராத் கோலி மற்றும் ப்ரியங்கா சோப்ரா. இந்த வருடம் 27-வது இடத்தில் இருக்கும் ப்ரியங்கா சோப்ரா சென்ற வருடம் வீராத் கோலி இருக்கும் 19-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: