பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் விவாகரத்தா?

பல விஷயங்களில் அவர்களுக்குள் கருத்து மோதல் இருப்பதால், விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

news18
Updated: March 30, 2019, 2:17 PM IST
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் விவாகரத்தா?
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்
news18
Updated: March 30, 2019, 2:17 PM IST
ஹாலிவுட் பிரபலங்கள் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் ஜோடி விவாகரத்து செய்ய உள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டுக்குச் சென்ற இவர், தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்க திரைக்கலைஞர் நிக் ஜோனஸை, பிரியங்கா சோப்ரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் உலகம் முழுவதும் இந்த ஜோடி பிரபலமானது.

Read Also... படுக்கையறை ரகசியங்களை பொதுமேடையில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா!

திருமணம் முடிந்த 3 மாதத்துக்குள் நிக் - பிரியங்கா இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக, ஓகே (OK ) என்ற சினிமா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பார்ட்டிக்குச் செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது உட்பட பல விவகாரத்தில் இருவருக்கும் பிரச்னை என்றும், பல விஷயங்களில் அவர்களுக்குள் கருத்து மோதல் இருப்பதால், விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.எனினும், பிரியங்கா தரப்பில் இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. நிக் - பிரியங்கா ஜோடி தற்போது மியாமி தீவில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதற்கான புகைப்படங்களையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Also See...

First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...