பாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக பிரியாமணி!

பாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக பிரியாமணி!
பிரியாமணி | கீர்த்தி சுரேஷ்
  • Share this:
நடிகை கீர்த்தி சுரேஷ் 'மைதான்’ என்ற பெயரிலான பாலிவுட் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததற்காக கடந்த ஆண்டு தேசிய விருது பெற்றார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க 'மைதான்' படத்தில் ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் மூலம் அவர் பாலிவுட் நாயகியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் தற்போது அந்தப் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

1950 முதல் 1963 வரையிலான இந்திய கால்பந்து வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘மைதான்’ படத்தில் இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹ்மானின் வாழ்க்கை வரலாறும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சையத் அப்துல் ரஹ்மான் கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கனும், அவரது மனைவி கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கீர்த்தி சுரேஷ் உடல் எடையைக் குறைத்ததால் அந்தக் கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருக்கமாட்டார் என்று படக்குழு அவரை நீக்கிவிட்டு பிரியாமணியை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்தின் 168-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் விலகியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை நாஞ்சில் நளினி மரணம்!
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading