ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்...

செம்பருத்தி சீரியல்

‘செந்தூரப்பூவே’ சீரியலில் துரை சிங்கத்தின் முதல் மனைவி இறந்துப் போன அருணா கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து வருகிறார்.

 • Share this:
  செம்பருத்தி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியா ராமன் தற்போது அத்தொடரிலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

  சீரியல்கள் தமிழ் மக்கள் மனதில் மிகவும் நெருக்கமாகியிருக்கின்றன. சீரியல்கள் அன்றாட பொழுதுபோக்கின் முக்கிய ஆதாரமாக மாறியிருக்கின்றன எனக் கூறலாம். ஃபன், நகைச்சுவை, சிலிர்ப்பு, காதல், சூழ்ச்சி மற்றும் நிலைத்தன்மை என ஒரு பொழுதுபோக்கிற்கு தேவையான அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.

  அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 2017-ல் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த குடும்ப நாடகம், ஆதித்யா (அப்போது கார்த்திக் ராஜ், இப்போது அக்னி) மற்றும் அவரது தாயார் அகிலாண்டேஸ்வரி (பிரியா ராமன்) ஆகியோருக்கு இடையிலான உறவை சித்தரிக்கிறது.

  செம்பருத்தி சீரியலின் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் ராஜ் மாற்றப்பட்டு, அக்னி நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே சீரியலில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது ஐஸ்வர்யாவுக்கும் - பார்வதிக்கும் இடையேயான மோதலை மையப்படுத்தி தான் செம்பருத்தி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

  இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியா ராமன் தற்போது செம்பருத்தி சீரியலில் இருந்து விலகுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விஜய் டிவி-யில் ரஞ்சித்தின் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியலில் துரை சிங்கத்தின் முதல் மனைவி இறந்துப் போன அருணா கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சிறப்பு கதாபாத்திரமாக இருந்த அருணா பாத்திரம், தற்போது பேயாக வந்து எதிராளியை பழி வாங்குவது போல கதை நகர்கிறது. அதனால் செம்பருத்தியில் இருந்து விலகும் பிரியா ராமன், செந்தூரப்பூவே சீரியலில் தொடர்ந்து நடிப்பார் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: