ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Priya Bhavani Shankar: 'இது யாருக்கும் நடக்கலாம்’ எச்சரிக்கும் பிரியா பவானி சங்கர்!

Priya Bhavani Shankar: 'இது யாருக்கும் நடக்கலாம்’ எச்சரிக்கும் பிரியா பவானி சங்கர்!

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

நீங்கள், நான், நம் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், என இது யாருக்கும் ஏற்படக்கூடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இது யாருக்கும் நடக்கலாம் அதனால் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் என கொரோனா மரணங்கள் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சமீபமாக நிறைய திரைப்பிரபலங்கள் கொரோனாவாலும், மாரடைப்பாலும் உயிரிழந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் கே.வி.ஆனந்த், நடிகர்கள் பாண்டு, நெல்லை சிவா என அந்தப் பட்டியல் நீள்கிறது.

இந்நிலையில் பாடலாசிரியர், பாடகர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட அருண்ராஜா காமராஜ் தனது மனைவி சிந்துவை கொரோனாவுக்கு பலி கொடுத்திருக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா மறைந்திருக்கிறார். இந்த சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டரில், “இது ரொம்ப வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு புறப்படும் வாழ்க்கையும் விட்டுச்செல்லும் சோகமான செய்தி என்னவென்றால், நீங்கள், நான், நம் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், என இது யாருக்கும் ஏற்படக்கூடும். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். இப்படி ஒன்று நடந்திருக்கக் கூடாது என விரும்புகிறேன், அருண்ராஜாவுக்கு வலிமையும் தைரியமும் கொடுக்க கடவுளை மனதார வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Priya Bhavani Shankar