இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமான ப்ரியா பவானி சங்கர்!

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது.

Web Desk | news18
Updated: July 16, 2019, 3:45 PM IST
இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமான ப்ரியா பவானி சங்கர்!
ப்ரியா பவானி சங்கர்
Web Desk | news18
Updated: July 16, 2019, 3:45 PM IST
ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே இந்த படம் சில பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியன்-2 படத்திற்கான தேதிகளை கமல்ஹாசன் ஒதுக்கியுள்ளார். இதனால் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடந்து நடைபெற உள்ளது உறுதியாகி உள்ளது.


இந்த படம் ஆரம்பத்தின் போது காஜல் அகர்வால் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது ப்ரியா பாவனி சங்கர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ப்ரியா பவானி சங்கர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது சித்தார்த்துக்கு ஜோடியாக உள்ளாரா என்பது விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

'றெக்க மட்டும் இருந்தா.. தேவதை!' - ப்ரியா பவானி சங்கர் ஆல்பம்...



Loading...

Also Watch

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...