Priya Bhavani Shankar: பிரியா பவானி சங்கர் காட்டில் பட மழை! - குவியும் வாய்ப்புகள்!

பிரியா பவானி சங்கர்

பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

  • Share this:
    நடிகை பிரியா பவானி ஷங்கர் ஜெயம் ரவியுடன் இணைந்து புதிய படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர். கேரளா மற்றும் பிற மாநில நடிகைகள் கோலோச்சும் சினிமாவில், வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் பெண்ணாக அவரது வளர்ச்சி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    தற்போது பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ஓ மணப்பெண்ணே ஆகியப் படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது. அதோடு, பெயரிடப்படாத ஹரியின் படம், ருத்ரன், இந்தியன் 2, பத்து தல, பெயரிடப்படாத சர்ஜூன் படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் மேலும் ஒரு படத்தில் பிரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தான் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: