நடிகை ப்ரியா பவானி சங்கர் கடந்த பத்து வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழில் ’
மேயாத மான்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம் உட்பட பல படங்களில் நடித்தவர் தற்போது யானை, குருதி ஆட்டம், ருத்ரன், திருச்சிற்றம்பலம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். படங்களின் எண்ணிக்கையை வைத்து சொன்னால் இன்றைய தேதியில் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ப்ரியா பவானி சங்கர் உள்ளார் இவர் கடந்த பத்து வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். சமீபத்தில் தனது காதலரை ரசிகர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் அறிமுகப்படுத்தியவர், அவரது பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படத்துடன் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க.. ரசிகர்களுக்காக மீண்டும் அவருடன் இணையும் விஜய் டிவி பிரியங்கா!
அதில், "நீ ஒரு மோசமான
டீன்ஏஜ் பையனாக இருந்து இப்போது ஒரு அற்புதமான மனிதனாக மாறி விட்டாய். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. புன்னகை, சாகசங்கள், அன்பு, நட்பு, அமைதி, ஆரோக்கியம் என அனைத்தும் உனக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று அதில் கூறி உள்ளார்.
இதையும் படிங்க.. சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் அபார வளர்ச்சிக்கு இதுவும் முக்கியமான காரணம்!
அத்துடன், "நான் வெளியிட்டுள்ள புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று தெரியும். அதனால் தான் இதை பகிர்ந்தேன்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ப்ரியா பவானி சங்கரின் இந்த பதிவில் டீன்ஏஜ் காதலர்களுக்கே உரிய சீண்டலும் விளையாட்டுத் தனங்களும் பொங்கி வழிவதை ரசிகர்கள் ஆர்வத்துடன் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.