• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெப் தொடர் நாயகியாகிறார் ப்ரியா பவானி சங்கர்...!

வெப் தொடர் நாயகியாகிறார் ப்ரியா பவானி சங்கர்...!

ப்ரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி சங்கர்

மனம் படத்தைத் தொடர்ந்து தமிழில் சூர்யா நடிப்பில் 24 படத்தை எடுத்தார் இயக்குநர் விக்ரம் குமார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யாவின் 24 படங்களை இயக்கிய விக்ரம் குமார் அடுத்து ஒரு வெப் தொடர் இயக்குகிறார். அதில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார்.

தலா ஒரு ஆங்கிலப் படமும், தெலுங்குப் படமும் இயக்கிவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் விக்ரம் குமார். முதல் படம் சிம்பு நடித்த அலை. கரையைத் தொடாமலே அலை திரும்பியது. ஆறு வருட காத்திருப்புக்குப் பின் 2009 இல் யாவரும் நலம் படத்தை மாதவன் நடிப்பில் எடுத்தார். படம் ஹிட். அடுத்து தெலுங்கில் இஷ்க், மனம் படங்களை எடுத்தார்.

இதில் மனம் படத்தில் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகார்ஜுன், அவரது மகன் நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்தனர். படமும் பரவலான வரவேற்பை பெற்றது. அத்துடன் அக்னியேனி குடும்பத்தின் ஒருவரானார் விக்ரம் குமார்.

Also read... வசூலை அள்ளிக் குவிக்கிறது துல்கர் சல்மானின் குருப் திரைப்படம்...!

மனம் படத்தைத் தொடர்ந்து தமிழில் சூர்யா நடிப்பில் 24 படத்தை எடுத்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. யு டர்ன் அடுத்து மீண்டும் தெலுங்குக்கு திரும்பியவர் நாக சைதன்யாவை வைத்து ஹலோ படத்தை எடுத்தார். தற்போது அதே நாக சைதன்யாவை வைத்து தேங்க்யூ என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இந்தப் படம் முடிந்ததும் அடுத்து ஒரு வெப் தொடர். இதிலும் நாக சைதன்யாவே நாயகன். நாயகியாக ப்ரியா பவானி சங்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர். விக்ரம் குமாருக்கு ராசியான தெலுங்கு மொழியில் இந்தத் தொடர் தயாராகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: