முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீடியாவுக்கு வரலைன்னா பாய் ஃப்ரெண்டை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகியிருப்பேன் - பிரியா பவானி சங்கர்

மீடியாவுக்கு வரலைன்னா பாய் ஃப்ரெண்டை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகியிருப்பேன் - பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

நியூஸ் சேனல்ஸ் தான் நான் கத்துக்குறதுக்கு நிறைய உதவியிருகிறது. எல்லாரையும் போலவே ரஜினிகாந்த், விஜய், அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.

  • 1-MIN READ
  • Last Updated :

மீடியாவுக்கு வரவில்லை என்றால் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகியிருப்பேன் என நியூஸ் 18 உடனான நேர்க்காணலில் தெரிவித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

செய்தி வாசிப்பாளரான பிரியா பவானி சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் ஆகிய படங்களில் நடித்தார் பிரியா பவானி சங்கர். தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நியூஸ் 18 உடனான நேர்க்காணலில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டார் பிரியா பவானி சங்கர். ’ரிப்போர்டிங் ஃபீல்டில் இருந்திருக்கிறீர்கள் தற்சமயம் மழை, வெள்ளம், புயல் வரும் போது நம்மளும் போய் ஒரு ரிப்போர்டிங் பண்ணலாம்ன்னு நினைச்சிருக்கீங்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிலநேரம் தோணும். இன்னும் நல்லா பண்ணிருப்போம்ன்னு நினைப்பேன். ஆனா அது நல்லா இருக்குமா இல்லையான்னு நீங்க தான் சொல்லனும்’ என்றார் பிரியா பவானி சங்கர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

மேலும் தொடர்ந்த அவர், ’மீடியா துறையை ரொம்ப மிஸ் பண்றேன். ஆயிரம் தான் இருந்தாலும் இது நடிப்பு தான். ஒருத்தரோட ஐடியாவை சீனா எழுதி தர்றாரு, அதுக்கு நாம நடிக்குறோம். ஆனா ரிப்போர்டிங் அப்படியில்ல. நல்ல பண்ணலைன்னு சீனியர் எடிட்டர் கிட்ட திட்டு வாங்கியிருப்போம். அதனால நியூஸ் சேனல்ஸ் தான் நான் கத்துக்குறதுக்கு நிறைய உதவியிருகிறது. எல்லாரையும் போலவே ரஜினிகாந்த், விஜய், அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என்றார்.

பின்னர் மீடியாவுக்குள் வராமல் இருந்திருந்தால் என்னவாகியிருப்பீர்கள் என்றதற்கு, ’எனக்கு ஞாபகம் இருக்கு, காலேஜ் படிக்கும் போது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு என் பாய் ஃப்ரெண்ட் கிட்ட சொன்னேன். ஸோ கல்யாணம் பண்ணி செட்டில் ஆகியிருப்பேன். என் பொருளாதார தேவைக்காக ஒரு வேலை பாத்துருப்பேன். இந்த வேலை தான் செய்யணும்ங்கற லட்சியம் எல்லாம் எனக்கு இல்ல’ என்றார்.

First published:

Tags: Priya Bhavani Shankar, Tamil Cinema