Priya Bhavani Shankar: விமர்சனங்களுக்கு தக்க பதிலடி தரும் பிரியா பவானி சங்கர்!

Priya Bhavani Shankar: விமர்சனங்களுக்கு தக்க பதிலடி தரும் பிரியா பவானி சங்கர்!

நடிகை ப்ரியா பவானி சங்கர்

முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க.

  • Share this:
    ட்விட்டரில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

    தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பான இளம் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' மற்றும் சிம்புவின் 'பாத்து தல' உள்ளிட்ட பல படங்களை தற்போது கைவசம் வைத்துள்ளார்.



    நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, “நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன், எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்” என ட்வீட் செய்திருந்தார் பிரியா பவானி சங்கர்.



    அதற்கு பயனர் ஒருவர், ‘மேடம் நீங்களும் திருட்டு திராவிட சொம்பு’ தானா எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரியா, ”பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் டைம்லைன்ல இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிக்கை துறைல இருந்திருக்கேன். என் வேலையே அதுதான். இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.



    இன்னும் ஒருவர் சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், க்ளவுட் நைன் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களில் பட வாய்ப்பு பெறுவதற்காக தான் பிரியா இப்படி ட்வீட் செய்துக் கொண்டிருக்கிறார், எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு, “ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy இல்ல” என பதிலடி கொடுத்திருக்கிறார்.



    பிரியா பவானி சங்கரின் இந்த ட்வீட்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: