ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் பிரியா பவானி சங்கர்.. போஸ்டருடன் புது பட அப்டேட்!

தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் பிரியா பவானி சங்கர்.. போஸ்டருடன் புது பட அப்டேட்!

நடிகை ப்ரியா பவானி சங்கர்

நடிகை ப்ரியா பவானி சங்கர்

அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா, தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மேயாதமான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களிலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் பிரியா பவானி சங்கர்.

Also read... சென்னை வந்த துணிவு அஜித்.. ஏர்போர்ட்டில் கூடிய ரசிகர்கள் கூட்டம்!

இந்நிலையில், அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை பிரியா பவானி சங்கர் போஸ்டருடன் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளனர் படக்குழுவினர். ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கும் இந்த படத்தில் சத்யதேவ் மற்றும் டாலி தனஞ்செயா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே இது 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Priya Bhavani Shankar