உள்ளாடை அளவு குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
செய்தி வாசிப்பாளரான பிரியா பவானி சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி படங்களில் நடித்தார் பிரியா பவானி சங்கர். தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை, ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
முதல் நாளிலேயே பீஸ்ட் படத்தின் வசூலை தட்டி தூக்கிய கே.ஜி.எஃப் 2!
KGF 2 Review: இந்திய உணர்வில் ஒரு சர்வதேச படம்!
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தனது புகைப்படங்களை பதிவிடுவதையும், ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் பிரியாவிடம், ”உங்களுடைய பிரா சைஸ் என்ன?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு "நான் 34டி ப்ரோ.. மார்பகங்களை நான் வேறு கிரகத்தில் இருந்து வாங்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் உண்டு. ஒருவேளை நீங்கள் உங்கள் பார்வையை அவர்களின் டி-ஷர்ட் வழியாக பார்த்தாலும் தெரியும். அதற்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.