லாரன்ஸுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!

லாரன்ஸுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!
ராகவா லாரன்ஸ் | பிரியா பவானி சங்கர்
  • Share this:
லாரன்ஸ் நாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்கள் வசூலைக் குவித்து வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் காஞ்சனா படத்தை ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இத்திரைப்படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை இயக்கி முடித்த பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் ரங்கஸ்தலம் தமிழ் ரீமேக்கிய்ல் நாயகனாக நடிக்கிறார் லாரன்ஸ். மேலும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் த்ரில்லர் படமொன்றிலும் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனிடையே மலையாளத்தில் ஹிட் அடித்த ஐயப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருப்பதால் அந்தப் படத்தில் தான் ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: உயிரற்ற பொருளை திருமணம் செய்யும் பெண்... மூட நம்பிக்கைகளை பேசும் ‘மாங்கல்ய தோஷம்’!


First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்