ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Atlee: அட்லியும், அவர் மனைவியும் அதிகம் நேசிக்கும் நபர் யார் தெரியுமா?

Atlee: அட்லியும், அவர் மனைவியும் அதிகம் நேசிக்கும் நபர் யார் தெரியுமா?

பிரியா அட்லீ

பிரியா அட்லீ

நடிகைகளும், நாயும் பிரிக்க முடியாதவை என்பது தெரியும். த்ரிஷா தெரு நாய்களுக்கு ஆதரவாக பலமுறை பேசியிருக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஒரு பக்கம் நாயை அடித்துக் கொல்கிறார்கள். இன்னொரு பக்கம் நாயின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி, நாயை மகன், மகளைப் போல நடத்துகிறார்கள். இயக்குனர் அட்லி தம்பதி அப்படியானவர்களில் ஒருவர் (இருவர்?).

  நடிகைகளும், நாயும் பிரிக்க முடியாதவை என்பது தெரியும். த்ரிஷா தெரு நாய்களுக்கு ஆதரவாக பலமுறை பேசியிருக்கிறார். ஒரு தெரு நாயை எடுத்து வளர்க்கவும் செய்தார். வரலட்சுமி இந்த ஊரடங்கின் போது, இதோ என் மகன் என்று தன்னுடைய செல்ல நாயை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பல நடிகைகள், எங்களின் ஊரடங்கு தோழன் என்று தங்கள் வீட்டு நாயை படத்துடன் சமூகவலைதளங்களில் அறிமுகப்படுத்தினார்கள். இது அட்லி மற்றும் அவரது மனைவி ப்ரியாவின் முறை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவர்கள் வீட்டு நாய் Boo அவர்கள் வீட்டிற்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகிறதாம். அதாவது ஐந்தாவது பிறந்தநாள். கேக் எல்லாம் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள். Boo அவர்களுக்கு மகிழ்ச்சியும், பாஸிடிவிட்டியும் தந்திருப்பதாக கூறியிருக்கும் ப்ரியா, இந்த உலகத்தில் எதைவிடவும் உன்னை தான் மம்மியும், டாடியும் (வேறு யார் அட்லியும், திருமதி அட்லியும்தான்) நேசிக்கிறோம். ஹேப்பி பர்த் டே மை ஏஞ்சல் என்று ப்ரியா தெரிவித்துள்ளார்.

  கொடுத்து வைத்த நாய்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Atlee