Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டி.ராஜேந்தர் கார் மோதியதில் தனியார் காவலாளி உயிரிழப்பு

டி.ராஜேந்தர் கார் மோதியதில் தனியார் காவலாளி உயிரிழப்பு

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

இந்த விபத்து ஏற்பட்ட போது அந்த காரில் நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்திரன் காரில் இருந்ததாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் சிலம்பரசனின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்திரன் கார் மோதி தனியார் காவலாளி உயரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டி.ராஜேந்திர் ஒட்டுநர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை இளங்கோ நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது முதியவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த 70 வயது முதியவர் முனுசாமி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது விபத்தை ஏற்படுத்திய கார் டிகர் சிம்புக்கு சொந்தமான கார் என தெரியவந்தது. நடிகர் சிம்பு உடைய கார் ஓட்டுனர் செல்வம் என்பவர் காரை ஓட்டி வந்ததும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு செல்வத்தை போலீசார் கைது செய்து , சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த விபத்து ஏற்பட்ட போது அந்த காரில் நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்திரன் காரில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் உயிர் இழந்த முதியவர் முனுசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: T Rajendar