ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Nayanthara vignesh wedding: நயன்தாரா திருமணம் நடக்கும் பகுதியில் பொது மக்களை அனுமதிக்க மறுக்கும் தனியார் காவலர்கள்

Nayanthara vignesh wedding: நயன்தாரா திருமணம் நடக்கும் பகுதியில் பொது மக்களை அனுமதிக்க மறுக்கும் தனியார் காவலர்கள்

நயன்தாரா திருமணம்:பொது மக்களை அனுமதிக்க மறுக்கும் தனியார் காவலர்கள்

நயன்தாரா திருமணம்:பொது மக்களை அனுமதிக்க மறுக்கும் தனியார் காவலர்கள்

Nayanthara vignesh wedding : திருமண விழாவின் உரிமை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் விடுதிக்கும் அருகில் இருக்கக்கூடிய சாலைகளிலும் இடங்களிலும் யாரையும் அனுமதிக்கக் கூடாது என தனியார் பாதுகாப்பு காவலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஈ.சி.ஆர் சாலையிலுள்ள ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இந்த திருமணம் நடைபெறுவதால் அந்த பகுதியில் பொது மக்களை அனுமதிக்க மறுக்கின்றனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்கிறார். இதற்கான விழா ஈ.சி.ஆர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.

அவர்கள் திருமண விழாவின் உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக அந்த விடுதிக்கு வெளியில் உள்ள சாலையில் கூட  பொதுமக்களையும் மீடியாக்களையும் அனுமதிக்க மறுக்கின்றனர்.

இதற்காக தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த காவலர்களை நிறுத்தி உள்ளனர். மேலும் இந்த விழாவிற்காக காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு திருமண விழாவின் உரிமை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் விடுதிக்கும் அருகில் இருக்கக்கூடிய சாலைகளிலும் இடங்களிலும் யாரையும் அனுமதிக்கக் கூடாது என தனியார் பாதுகாப்பு காவலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் இந்த திருமணத்திற்கு வரும் நட்சத்திரங்களின் தொலைபேசிகள் வாங்கி வைத்துக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கின்றனர். மேலும் அழைப்பிதலில் உள்ள Bar Code களை ஸ்கேன் செய்தால் மட்டுமே உள்ள செல்ல முடியும் என கூறப்படுகிறது.

Also read... லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சூப்பர் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்!

திருமண விழாவை தனியார் நிறுவனத்திற்கு வழங்கிவிட்டு புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகக் கூடாது என நிர்ப்பந்தித்து வருகின்றன. இதன் காரணமாக கடற்கரைக்கு செல்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.  மேலும் விடுதிக்கு பின்புறம் இருக்கும் கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் நிற்க கூடாது என நிர்ப்பந்த கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director vignesh shivan, Nayanthara