பகத் பாசிலுக்கு கல்தா... பிருத்விராஜ் படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்!

அல்போன்ஸ் புத்திரன்

அல்போன்ஸ் புத்திரனின் முதல் படம் நேரம் தமிழ், மலையாளம் இரு மொழிகளில் வெளியானது. நாயகன், நாயகி உள்பட ஒரு சில நடிகர்கள் மட்டுமே இரு மொழிகளிலும் நடித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பகத் பாசில் நடிப்பில் இயக்கவிருந்த படத்தை தள்ளி வைத்து, பிருத்விராஜ் நடிப்பில் வேறு கதையை படமாக்குகிறார் அல்போன்ஸ் புத்திரன்.

அல்போன்ஸ் புத்திரனின் முதல் படம் நேரம் தமிழ், மலையாளம் இரு மொழிகளில் வெளியானது. நாயகன், நாயகி உள்பட ஒரு சில நடிகர்கள் மட்டுமே இரு மொழிகளிலும் நடித்தனர். மற்றவர்களை அந்தந்த மொழிக்கேற்ப நடிக்க வைத்திருந்தார். அவரது இரண்டாவது படம் பிரேமம் இந்திய அளவில் ஹிட்டடித்தது. மலையாள சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் பிரேமம் இன்றும் நான்காவது இடத்தில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரேமத்தைத் தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் யாரை வைத்து படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இருந்தது. பல வருடங்கள் மௌனமாக இருந்தவர், சமீபத்தில், பகத் பாசில் நடிப்பில் பாட்டு என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். இப்போது அந்த அறிவிப்பில் மாற்றம். பகத் பாசிலுக்கு பதில் பிருத்விராஜ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். செப்டம்பர் இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Also read... நாயாட்டு தெலுங்கில் ரீமேக் - நிமிஷா சஜயன் வேடத்தில் பிரபல நடிகை!

பகத் பாசிலை வைத்து அல்போன்ஸ் புத்திரன் இயக்குவதாக இருந்த பாட்டு படத்தின் கதையல்ல, பிருத்விராஜ் நடிக்கும் படம் என்றும், பகத் பாசிலை வைத்து வேறொரு சந்தர்ப்பத்தில் பாட்டு படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்குவார் எனவும் சொல்லப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: