அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் மலையாளப் படவுலகின் முன்னணி நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்து வருகிறார் . அவரைத் தொடர்ந்து இன்னொரு மலையாள ஹீரோவும் பிரபாஸின் படத்தில் வில்லனாக நடிக்கயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன .
மலையாள சினிமாவில் நாயகனாக மட்டுமின்றி இயக்குனராகவும் சாதித்தவர் பிருத்விராஜ் . மலையாளத்துடன் தமிழ் , இந்தியிலும் நாயகனாக நடித்துள்ளார் . அவரது நடிப்பில் இந்த வருடம் வெளியான குருதி மிகவும் பேசப்பட்டது . லூசிபர் வெற்றியைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் ப்ரோ டாடி என்ற படத்தையும் அவர் இயக்கியுள்ளார் . இவரை பிரபாஸின் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது .
பாகுபலிக்குப் பிறகு பான் - இந்தியா நடிகராகிவிட்டார் பிரபாஸ் . அவர் நடிக்கும் படங்கள் குறைந்தது 5 மொழிகளில் வெளியாகிறது . 2022 ஜனவரி 14 ஆம் தேதி அவர் நடித்த ராதே ஷ்யாம் வெளியாகிறது . அதையடுத்து திரைக்கு வரவிருக்கும் படம் சலார் . கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இதனை இயக்கி வருகிறார் . நாயகியாக ஸ்ருதிஹாசனும் , முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபுவும் நடிக்கின்றனர் . இந்தப் படத்தில் பிரதான வில்லன் வேடத்தில் நடிக்க பிருத்விராஜை அணுகியிருக்கிறார்கள் .
also read : தனி ஹெலிஹாப்டரில் ஆன்மிக சுற்றுலா சென்ற சமந்தா.. யார் கூட போயிருக்காங்க தெரியுமா ?
பிருத்விராஜ் சலாரில் நடித்தால் படத்தின் வேல்யூ அதிகமாகும் . குறிப்பாக மலையாளத்தில் படத்தின் சந்தை மதிப்பு அதிகரிக்கும் . தமிழ்நாட்டிலும் பிரபாஸைவிட பிருத்விராஜே பிரபலம் . இந்தியில் மூன்று படங்களில் நடித்து ஏற்கனவே அங்குள்ள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிருத்விராஜ் . இத்தனை பாஸிடிவ் அம்சங்கள் இருப்பதால் , அவரை பிரதான வில்லனாக்க முயற்சிக்கிறார்கள் .
பிருத்விராஜ் அனேகமாக நடிக்க சம்மதிக்கலாம் என்கின்றன தகவல்கள் . Published by: Tamilmalar Natarajan
First published: October 22, 2021, 16:27 IST
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor prabhas