நயன்தாரா நடிக்கும் கோல்ட் - சூப்பர் அப்டேட்...!

நயன்தாரா, அல்போன்ஸ்புத்திரன், பிருத்விராஜ்

அவ்வப்போது மலையாளத்திலும் தலைகாட்டுகிற நயன்தாரா, பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ்புத்திரனின் புதிய படத்தில் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நயன்தாரா நடிக்கும் புதிய படத்துக்கு கோல்ட் (Gold) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் தயாராகும் இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

நயன்தாரா நாயகி மையப்படங்களில் நடித்துக் கொண்டே முன்னணி நாயகர்கள் படங்களிலும் நடிக்கிறார். அவரது நடிப்பில் தீபாவளிக்கு அண்ணாத்த வெளிவர உள்ளது. இந்தியில் அட்லி இயக்கும் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு புனேயில் தொடங்கியது. நயன்தாரா இதில் கலந்து கொண்டார். அத்துடன் லூசிபர் படத்தின் இந்தி ரீமேக்கான காட்பாதரிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி இதில் நடித்து வருகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவ்வப்போது மலையாளத்திலும் தலைகாட்டுகிற நயன்தாரா, பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ்புத்திரனின் புதிய படத்தில் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்துக்கு கோல்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் படப்பிடிப்பு தொடங்கியது. பிருத்விராஜ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

பிருத்விராஜ் மோகன்லால் நடிப்பில் ப்ரோ டாடி படத்தை ஹைதராபாத்தில் இயக்கி வந்தார். அதன் படப்பிடிப்பு 6 ஆம் தேதி முடிந்த நிலையில், நேற்று எட்டாம் தேதி அல்போன்ஸ்புத்திரனின் படப்பிடிப்பில் கலந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியமளித்துள்ளது. "பிற மொழிகள் குறித்து தெரியாது.

Also read... மார்டன் உடையில் தந்தையின் பட பூஜையில் கலந்துகொண்ட அதிதி...!

இங்கே மலையாளத்தில் நாள்களை யாரும் வீணடிப்பதில்லை. ஒரு படம் முடிந்தது என்று நாள்கணக்கில் விடுமுறை எடுத்துக் கொண்டால் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படம் தள்ளிப்போய் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்" என இது குறித்த கேள்விக்கு பிருத்விராஜ் பதிலளித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: