VIDEO: லூசிபர் படப்பிடிப்பில் மோகன்லால் செய்த வேலையை பாருங்க

லூசிபர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சக்கப்போடு போட்டது

news18
Updated: May 15, 2019, 10:32 AM IST
VIDEO: லூசிபர் படப்பிடிப்பில் மோகன்லால் செய்த வேலையை பாருங்க
மோகன் லால் - ப்ரித்வி ராஜ்
news18
Updated: May 15, 2019, 10:32 AM IST
ரஷ்யாவில் லூசிபர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குநர் ப்ரித்வி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன் லால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் லூசிபர். இந்தப் படத்தை மலையாள நடிகர் ப்ரித்வி ராஜ் இயக்கியிருந்தார்.

இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சக்கப்போடு போட்டது . இந்நிலையில் ரஷ்யாவில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குநர் ப்ரித்வி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மண் மூட்டைகளை மோகன் லால் சுமந்து செல்கிறார்.

Loading...
அந்த பதிவில், ‘ ரஷ்யாவில் -16 டிகிரி செல்சியஸ். இரண்டு மண் மூட்டைகளும் 20 கிலோவுக்கு அதிகமாக இருக்கும். நாங்கள் அவர் தங்குவதற்காக தனி இடம் ஏற்பாடு செய்தோம். ஆனால் அவர் எங்களுடன் தங்குவதையே விரும்பினார். மேலும் படப்பிடிப்புக்காக உதவினார்’ என்று ப்ரித்விராஜ் கூறியுள்ளார்.

Also watch

First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...