• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிருத்விராஜ், ரவி கே சந்திரனின் ப்ரம்மம் - சூப்பர் அப்டேட்

பிருத்விராஜ், ரவி கே சந்திரனின் ப்ரம்மம் - சூப்பர் அப்டேட்

பிரித்விராஜ்

பிரித்விராஜ்

பிருத்விராஜ் நடித்த கோல்ட் கேஸ், குருதி படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின.

  • Share this:
    பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மலையாளத்தில் இயக்கியிருக்கும் படம் ப்ரம்மம். இதன் வெளியீடு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

    ரவி கே சந்திரன் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர், தமிழர். ஆனால், முதல் படம் கிடைத்தது மலையாளத்தில். தொடர்ந்து 12 மலையாளப் படங்களில் பணியாற்றிய பிறகே தமிழில் வாய்ப்பு கிடைத்தது. முதல்படம் விஜயகாந்தின் ஆனஸ்ட்ராஜ். இன்றும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு தனித்தன்மையுடன் இருப்பதைப் பார்க்கலாம்.

    அதன் பிறகு மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஷங்கரின் பாய்ஸ், மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் என முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இந்தியில் பிளாக், தில் சாத்தா ஹே, கொய் மில் ஹயா, சாவரியா, மை நேம் இஸ் கான் உள்பட ஏராளமானப் படங்கள்.

    2014-ல் ஜீவா நடிப்பில் யான் என்ற படத்தை இயக்கி ஒளிப்பதிவாளராக சேர்த்து வைத்த பெயரை கெடுத்துக் கொண்டார். 2021-ல் பிருத்விராஜ் நடிப்பில் ப்ரம்மம் என்ற மலையாளப் படத்தை அவரே ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

    Prithviraj Ravi K Chandran Bhramam, prithviraj 2004 movies, kuruthi release date, brahmam malayalam movie cast, brahmam full movie, prithviraj movies, cold case malayalam movie, பிரம்மம், பிரித்விராஜ், பிரித்விராஜ் படம், ரவி கே சந்திரன், பிரித்விராஜ் மலையாள படம்
    பிரித்விராஜ்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிருத்விராஜ் நடித்த கோல்ட் கேஸ், குருதி படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. ப்ரம்மம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 7-ஆம் தேதி ப்ரம்மம் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: