பிரேமம் இயக்குனரின் படத்தில் நயன்தாரா, அஜ்மல்!

நயன்தாரா, அஜ்மல்

சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் நடித்திருந்தார். இப்போது அல்போன்ஸ் புத்திரன் படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். 

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரேமம் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை தந்த அல்போன்ஸ் புத்திரன் அடுத்து பிருத்விராஜ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் நயன்தாரா, அஜ்மல் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

அல்போன்ஸ் புத்திரனின் முதல் படம் நேரம். தமிழ், மலையாளம் இரு மொழிகளில் தனித்தனியே எடுத்திருந்தார். இரண்டு மொழிகளிலும் படம் வெற்றி பெற்றது. அடுத்து பிரேமம் படத்தை மலையாளத்தில் இயக்கினார். கேரளா, தமிழ்நாடு இரு மாநிலங்களிலும் படம் அமோக வரவேற்புடன் ஓடியது. பிற மொழிகளில் பிரேமத்தை ரீமேக் செய்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வெற்றிக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் பல வருடங்கள் படம் எதுவும் இயக்கவில்லை. இறுதியில் பகத் பாசில் நடிப்பில் பாட்டு என்ற படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். பிறகு அதிலும் மாற்றம். பாட்டு படத்தை தள்ளி வைத்து, பிருத்விராஜ் நடிப்பில் புதுப்படத்தை தொடங்குவதாக கூறினார்

Also read... சூரரைப்போற்று படத்தை வெளியிட மாட்டோம் - தொடங்கியது திரையரங்கு, ஓடிடி போர்!

இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாராவும், முக்கிய வேடத்தில் அஜ்மலும் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் நடித்திருந்தார். இப்போது அல்போன்ஸ் புத்திரன் படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள்
Published by:Vinothini Aandisamy
First published: