ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரேமம் படத்தின் இயக்குனரின் அடுத்த படம் 'கோல்ட்' வௌியாகும் தேதி அறிவிப்பு

பிரேமம் படத்தின் இயக்குனரின் அடுத்த படம் 'கோல்ட்' வௌியாகும் தேதி அறிவிப்பு

கோல்ட் திரைப்படம்

கோல்ட் திரைப்படம்

Nayanthara | இந்த நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி படத்தை வெளியிடுவதாக இரண்டாவது முறையாக அறிவித்திருக்கின்றனர். இந்த முறை படம் நிச்சயம் வெளியாகும் என்றும் பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    நயன்தாரா நடித்துள்ள கோல்ட் திரைப்படம் வரும் 1-ம் தேதி வெளியாகிறது என பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    பிரேமம் திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது பிருத்திவிராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து, இதை ஓணம் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு, அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் இறுதி கட்டப் பணிகளை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் முடிக்கவில்லை.

    இதன் காரணமாக படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி படத்தை வெளியிடுவதாக இரண்டாவது முறையாக அறிவித்திருக்கின்றனர். இந்த முறை படம் நிச்சயம் வெளியாகும் என்றும் பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.

    மலையாளப்பட இயக்குநர் சென்ன ஹெக்டேயின் '1774 வொயிட் ஆல்டோ' படம் எப்படி இருக்கு?

    அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம், பிரேமம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழகத்திலும் பெரும் வெற்றியடைந்தன. இதன் காரணமாக கோல்ட் திரைப்படத்திற்கு இங்கு எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Published by:Srilekha A
    First published:

    Tags: Nayanthara