ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சென்சார் சான்றிதழை பெற்றது நயன்தாராவின் கோல்ட் திரைப்படம்… டிசம்பர் 1ஆம்தேதி ரிலீஸ்…

சென்சார் சான்றிதழை பெற்றது நயன்தாராவின் கோல்ட் திரைப்படம்… டிசம்பர் 1ஆம்தேதி ரிலீஸ்…

கோல்டு படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர்

கோல்டு படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம், ப்ரேமம் ஆகிய இரண்டு படங்களும் தமிழகத்தில் நல்ல பெற்றியடைந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாரா நடித்துள்ள கோல்ட் திரைப்படத்திற்கு தணிக்கையில் U சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரம், ப்ரேமம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது கோல்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் வரும் ஒன்றாம் தேதி படத்தை மலையாளம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியிடுகின்றனர்.  இந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி இருந்தனர்.

பாபா ரீ-ரிலீஸூக்கு டப்பிங் பணிகளை முடித்த ரஜினிகாந்த்!

படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் கோல்ட் திரைப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளனர். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம், ப்ரேமம் ஆகிய இரண்டு படங்களும் தமிழகத்தில் நல்ல பெற்றியடைந்தன.

அடியே சக்கரக்கட்டி..! நடிகை ஆத்மிகாவின் கண்ணை கவரும் படங்கள்..!

குறிப்பாக, ப்ரேமம் படம் மலையளத்திலே வெளியாகியே சத்யம்  திரையரங்கில் சுமார் 200 நாட்களை தாண்டி திரையிடப்பட்டது. பிரேமம் திரைப்படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இந்த கோல்ட் திரைப்படமும் தமிழகத்தில் பெரும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

' isDesktop="true" id="846508" youtubeid="rpXC8NC9d8k" category="cinema">

இதேபோன்று எந்தவொரு பெரிய புரொமோஷனும் இல்லாமல் கோல்ட் படம் வெளியாகவுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் ட்ரெய்லர் இன்னும் வெளியிடப்படவில்லை. 8 மாதங்களுக்கு முன்பு படத்தின் டீசர் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இவற்றைத் தாண்டி படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

First published:

Tags: Kollywood, Nayanthara