• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழகத்தில் பிருத்விராஜுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

தமிழகத்தில் பிருத்விராஜுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

பிருத்விராஜ்

பிருத்விராஜ்

பிருத்விராஜின் இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது புகைப்படத்தை எரித்தும், அவருக்கு எதிராக கோஷமிட்டும் அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனி நபர்கள் என பலதரப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
முல்லைப் பெரியார், காவிரி என்பவை கரண்டைவிட ஹைவோல்டேஜ் கொண்ட பிரச்சனைகள். இதனை தொட்டு விளையாடிய யாரையும் தமிழகம் சும்மாவிட்டதில்லை. தெரிந்தோ தெரியாமலோ இந்த ஹைவோல்டேஜை கையில் பிடித்திருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.

முல்லைப் பெரியார் அணை என்பது தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் ஜீவாதாரத்தை கொண்டது. அதன் கொள்ளளவைவிட குறைந்த தண்ணீரை தேக்கி, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது கேரளா. அணை பழுதடைந்துவிட்டது என்ற கேரள அரசியல்வாதிகளின் ட்ராமாவை தமிழகம் சட்டப்படி சந்தித்து, அது வெறும் ட்ராமா என நிரூபித்தது.

எனினும் கேரளாவில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகையில் முல்லைப் பெரியாறைவிட பெரிய இடுக்கி அணையை விட்டு முல்லைப் பெரியாறை பிரச்சனையின் மையமாக்குவது இப்போதும் தொடர்கிறது.

கேரளாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. முல்லைப் பெரியாறைவிட அதிக தண்ணீரை பிற அணைகளிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள்.

உண்மை இப்படியிருக்க, முல்லைப் பெரியாறால்தான் கேரளாவுக்கு இத்தனை துன்பம் என பலர் பேசி வருகின்றனர். நடிகர் பிருத்விராஜ், 125 ஆண்டுகள் ஆன அணையை வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



Also read... மாநாடு படத்தைப் பார்த்த பிறகு எஸ்.ஜே.சூர்யா போட்ட அதிரடி ட்வீட்!

அணைக்கு வயது நிர்ணயம் செய்ய, அணை விலங்கோ, மனிதனோ அல்ல. அணையின் பலத்தைப் பொறுத்து அது எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தாக்குப் பிடிக்கும். 125 ஆண்டுகள் கழிந்த எத்தனையோ அணைகள் இந்தியாவில் உள்ளன. அதையெல்லாம் இடிக்க வேண்டும் என்கிறாரா பிருத்விராஜ்?



பிருத்விராஜின் இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது புகைப்படத்தை எரித்தும், அவருக்கு எதிராக கோஷமிட்டும் அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனி நபர்கள் என பலதரப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: