ஐயப்பனும் கோஷியும்(Ayyappanum Koshiyum) இயக்குநரான சச்சிதானந்தனுக்கு 2020-க்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரித்வி ராஜ், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடித்து சச்சிதானந்தனால் இயக்கப்பட்ட ஐய்யப்பனும் கோஷியும் மலையாளத்தில் ஹிட் அடித்ததோடு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அமேசான் பிரைமில் வெளி வந்த இப்படத்தை பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் கண்டு களித்தனர். அப்படத்தில் இடம்பெற்ற ‘கலகாத்தா’ பாடலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது.
இந்நிலையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஸ்டண்ட் அமைப்பு, சிறந்த பின்னணி பாடகி உள்ளிட்ட விருதுகளை அப்படம் வென்றுள்ளது.
அப்படத்தின் இயக்குநர் கே ஆர் சச்சிதானந்தன், ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராஜசேகர், மாபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர், நடிகர் பிஜு மேனன், கலகாத்தா பாடல் பாடிய நஞ்சம்மா உள்ளிட்டோர் விருதுகளை வென்றுள்ளனர்.
இப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இப்படத்தின் இயக்குநர் சச்சிதானந்தன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு தற்போது சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது மலையாள சினிமாவையே கலங்க வைத்துள்ளது.
Congratulations Biju chettan, Nanjiamma, and the entire action team of Ayyapanum Koshiyum. And Sachy..I don’t know what to say man... Wherever you are..I hope you’re happy…coz I’m proud of you..and will be forever! ❤️💔 pic.twitter.com/7SVFbL7ZI9
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) July 22, 2022
இந்த அறிவிப்பையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்படத்தின் கதாநாயகன் பிரித்விராஜ் ‘பிஜு சேட்டன், நஞ்சம்மா மற்றும் மொத்த ஆக்ஷன் குழுவுக்கும் என் வாழ்த்துகள். சச்சி.. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பா.. நீ எங்கிருந்தாலும்.. நீ மகிழ்ச்சியாக இருப்பாய் என நம்புகிறேன்.. ஏன் என்றால் நான் உன்னை எண்ணி பெருமைப்படுகிறேன்.. எப்போதும் பெருமை கொள்வேன்.” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
Published by:Saravana Siddharth
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.