ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவளி ரிலீஸ் போட்டியில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் !

தீபாவளி ரிலீஸ் போட்டியில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் !

பிரின்ஸ் ரிலீஸ்

பிரின்ஸ் ரிலீஸ்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது என  படக்குழு அறிவித்துள்ளனர். 

டான் திரைப் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.  மேலும் இந்த திரைப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.

'ரூமுக்கு வாங்க'! ஆதி புருஷ் இயக்குனர் மீது கோபப்பட்டாரா பிரபாஸ்? வைரலாகும் வீடியோ!

இருந்தாலும் எந்த தேதியில் படம் வெளியாகிறது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.  ஆனால் 21-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.  இந்த நிலையில் தற்போது பட குழுவினர் பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் உருவாகியுள்ள பாடல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.  அதைத் தொடர்ந்து படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளிலும் படக்குழு இறங்க உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Deepavali, Diwali, Kollywood, Sivakarthikeyan, Tamil Cinema