ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அலுப்பு தட்டும்.. வெட்டி வீசுங்க - பிரின்ஸ் படத்தில் 12 நிமிட காட்சிகளை கட் செய்த சிவகார்த்திகேயன்!

அலுப்பு தட்டும்.. வெட்டி வீசுங்க - பிரின்ஸ் படத்தில் 12 நிமிட காட்சிகளை கட் செய்த சிவகார்த்திகேயன்!

பிரின்ஸ் ரிலீஸ்

பிரின்ஸ் ரிலீஸ்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன.

  தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் பிரின்ஸ் இந்த திரைப்படம் 21ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் திரையிடப்படுகிறது.  நகைச்சுவை கலந்த காதல் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தை இரண்டு மணி நேரம் 23 நிமிடம் ஓடக்கூடிய வகையில் உருவாகி இருந்தனர். அந்தப் பதிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பார்த்துள்ளார் அதன்பிறகு பட குழுவினரிடம் இருந்து சில காட்சிகளை நீக்க கூறியுள்ளார். இதன் காரணமாக பிரின்ஸ் படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகளை படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.

  எந்த இடத்திலும் ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்த கூடாது என்ற நோக்கில் நேரத்தை மாற்றி அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரின்ஸ் திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 11 நிமிடம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 7 நிமிடம் 19 நாடுகளும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 3 நிமிடம் 45 நொடிகள் ஓடக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, லவ் யூ ஆல்... எல்லாவிதமான சப்போர்ட்டிற்கும் நன்றி, நீங்களும் அன்ப கொடுத்துட்டே இருங்க, நானும் அன்ப கொடுத்துட்டே இருக்கேன்.

  கடவுள்ன்னு ஒருத்தர் இருந்திருந்தா... விஜய் ஆண்டனியின் ட்வீட்டுக்கு இயக்குநர் நவீன் பதில்

  அக்டோபர் 21-ம் தேதி உங்களுக்கு தெரியும் பிரின்ஸ் வெளியாகுது. குடும்பத்தோட போய் எல்லாரும் படத்த பருங்க. ரொம்ப சிம்பிளான படம் தான்... நான் சொன்னதுலாம் படத்துல இருக்கும் நீங்க குடும்பத்தோட போய் படத்த பாத்துட்டு ஜாலியா சிரிச்சுட்டு வந்து நீங்கபாட்டுக்கு உங்க வேலைய செய்யலாம். அப்படிதான் அந்த படம் இருக்கும் என்றார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Sivakarthikeyan