ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லைக்ஸ்களை அள்ளும் பிரின்ஸ் படத்தின் ஜெசிகா பாடல்!

லைக்ஸ்களை அள்ளும் பிரின்ஸ் படத்தின் ஜெசிகா பாடல்!

பிரின்ஸ்

பிரின்ஸ்

பிரின்ஸ் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்ட பட குழு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ்  திரைப்படத்தில் இடம்பெறும் ஜெசிகா பாடல் வெளியாகியுள்ளது. 

டான் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தை தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வருகின்றனர்.

8 வருடமாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு உதவி செய்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் மரியா என்ற வெளிநாட்டு நடிகை நாயகியாக நடித்துள்ளார். மேலும் தமன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல் ஏற்கனவே சிங்கிள் ட்ராக் முறையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில் பிரின்ஸ் படத்தில் இடம்பெறும் ஜெசிகா என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.

' isDesktop="true" id="807816" youtubeid="AsPOlwMSEX4" category="cinema">

அறிவு எழுதியுள்ள அந்தப் பாடலை,  இசையமைப்பாளர் தமன் பாடியுள்ளார். அத்துடன் அந்தப் பாடலின் லிரிக் வீடியோவிலும் அவர் நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை தற்போது சமூக வலைதளமான யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.  ஜெசிகா என தொடங்கும் அந்த இரண்டாவது பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற தொடங்கியுள்ளது.  சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் தல 100 கோடி ரூபாய் வசூல் செய்தது அந்த வரிசையில் பிரின்ஸ் திரைப்படமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Sivakarthikeyan, Tamil Cinema