நாடறிந்த நடிகையாக இருந்து வரும், சன்னி லியோனுக்கு எதிராக சாமியார்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மத உணர்வை புண்படுத்தியதாக சன்னி லியோன் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
பிரபல இசை நிறுவனமான 'சரிகம', மதுபான் என்ற பெயரில் உருவாகியிருக்கும், நடிகை சன்னி லியோனின் வீடியோ ஆல்பத்தை புதன் அன்று வெளியிட்டது. தற்போது வரை இந்த ஆல்பம் 8 மில்லியன் பார்வைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
சரிகமவுக்கு யூடியூபில் 25 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருப்பதால், மதுபான் ஆல்பம் வைரலாகி வருகிறது.
1960-ல் வெளியான கோஹினூர் படத்தில் இடம்பெற்ற, 'மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே' என்ற பாடலை, மதுபான் ஆல்பத்தில் ரீமிக்ஸ் செய்துள்ளார்கள். ரீமிக்ஸை பிரபல பாடகர்கள் கனிகா கபூர், அரிந்தம் சக்ரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர்.
இதையும் படிங்க : மாடர்னான உடையில் சன்னி லியோன் - கவர்ச்சி புகைப்படங்கள்
இந்தப் பாடல் இந்துக்கள் புனிதமாக மதிக்கும் கிருஷ்ணா, ராதாவை இழிவு படுத்துவதாக கூறி, பாடல் வந்த நாள் முதலே, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க : #MakeYourOwnMask | எதையெல்லாம் மாஸ்க் ஆக அணியலாம்...! சன்னி லியோன் வெளியிட்ட விழிப்புணர்வு புகைப்படங்கள்
பழைய பாடல் நன்றாக இருந்ததாகவும், ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கும் பாடல் மத உணர்வை புண்படுத்துவதாகவும் தற்போது புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சன்னி லியோன் பாடலுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : Ileana DCruz Photos: இணையத்தை கலக்கும் நடிகை இலியானா போட்டோஸ்!
இதுதொடர்பாக அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாடலை தடை செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sunny Leone