நடிகர் பிரேம்ஜி இறுதியாக தனது பேச்சிலர் லைஃபிற்கு டாடா பை பை சொல்லப் போகிறார் எனத் தெரிகிறது.
இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி அமரன், 'ஆதலால் காதல் செய்வீர்' மற்றும் 'கில்லாடி' போன்ற படங்களில் பணியாற்றிய பாடகி வினைத்தா ஆகியோர் காதலித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேம்ஜி மற்றும் வினைத்தா இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம், வினைத்தா தான் பிரேம்ஜியிடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துகொண்ட பிறகு எழுந்துள்ளது. "உன் கண்களில், நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி, நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன்" என தலைப்பிட்டு, பிரேம்ஜியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் வினைத்தா.
தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி... கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!
42 வயதான பிரேம்ஜி, பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் திரைப்பட இயக்குநராக விரும்பிய இவர், தனது உறவினரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவிடம் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
சமந்தா, தனுஷை அடுத்து விவாகரத்துக்கு தயாராகும் பிரபல நடிகை
ஞாபகம் வருதே படத்தின் மூலம் சுயாதீன இசையமைப்பாளராக மாறினார் பிரேம்ஜி. 30-க்கும் மேற்பட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள அவரது சகோதரரும் இயக்குநருமான வெங்கட் பிரபுவின் திரைப்படங்களில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor premji, Tamil Cinema