அண்ணன் வெங்கட் பிரபு படத்தையே கலாய்த்து அவரது தம்பி பிரேம்ஜி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
டைம் லூப் திரைக்கதையில் உருவாக்கப்பட்ட மாநாடு படத்தில் ஒரே காட்சிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும். ஆனால் காட்சியமைக்கப்பட்ட விதம் மற்றும் எடிட்டிங், பின்னணி உள்ளிட்டவை காரணமாக மாநாடு படத்தின் ஒவ்வொரு சீன்களையும், ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர்.
ஆனால், ஒரு சிலருக்கு மாநாடு படம் இன்று வரையில் புரியாமல் இருப்பதையும் மறுக்க முடியாது. அவர்களில் ஒரு ரசிகர் மாநாடு படம் தனக்கு பிடிக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி, வெங்கட் பிரபுவையும் டேக் செய்துள்ளார்.
😂😂😂😂😂😂😂😂😂 @vp_offl pic.twitter.com/qnJymGAjR9
— PREMGI (@Premgiamaren) January 16, 2022
இதற்கு வெங்கட் பிரபு கொடுத்துள்ள பதில் ரசிக்கும்படி அமைந்துள்ளது. பிரேம்ஜி ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ள வெங்கட் பிரபு, நாம பார்க்காத விமர்சனமா, அடுத்த படம் இவருக்கும் புடிக்கும்படி புரியும்படி எடுக்க ட்ரை பண்ணுவோம் என்று கூறியுள்ளார்.
All criticism we have to take it in right spirit Prem!! Good or bad!! Namba paakadha criticism ah!! Adutha Padam ivarukkum pudikura maathiri puriyura maathiri try pannuvom @Premgiamaren #SpreadLove https://t.co/PQY4cCGhSz
— venkat prabhu (@vp_offl) January 16, 2022
இதற்கிடையே, வெங்கட் பிரபு தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் வழக்கமான இசையமைப்பாளர் யுவனை தவிர்த்து விட்டு, பிரேம்ஜிக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.
மன்மத லீலை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் விபரம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Venkat Prabhu