பிரேம்ஜி கூட இருந்தும் குடிக்காமல் இருப்பது பெரிய விஷயம் என நடிகர் சிம்பு சொல்லியிருந்ததற்கு தற்போது அவர் ரியாக்ட் செய்துள்ளார்.
இயக்குனர் கங்கை அமரனின் மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமானவர் நடிகர் பிரேம்ஜி. சில குறிப்பிட்ட படங்களில் நடித்துள்ள அவர், நிச்சயமாக தனது சகோதரர் இயக்கும் திரைப்படங்களில் இருப்பார். இது அவர்களின் பிணைப்பைக் காட்டுகிறது, மேலும் அவர் பல நடிகர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய சிம்பு, கடந்த ஓராண்டாக தான் மது அருந்தவில்லை என்றும், குடி பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்றும் கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதோடு பிரேம்ஜி போன்றோர் உடனிருந்தும் ஒரு வருடமாக குடிக்காமல் இருப்பது பெரிய விஷயம் என போகிற போக்கில் தனது நண்பன் பிரேம்ஜியை வம்பிழுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அதற்கு
வடிவேலுவின் ஒரு மீம் மூலம் ரியாக்ட் செய்திருக்கிறார் பிரேம்ஜி. உடல் முழுக்க சேற்றோடு இருக்கும் வடிவேலு, ”டேய் நான்
சிவனேன்னு தானடா போய்ட்டு இருந்தேன். யார் வம்பு தும்புக்காச்சும் போனேனா” என்று கேட்கும் படம் தான் அது.
இதற்கிடையே
பிரேம்ஜிக்கு பெண் பார்த்து வருவதாக சமீபத்தில் அவரது அப்பா கங்கை அமரன் தெரிவித்திருந்தார். இதோடு சிம்பு சொன்ன விஷயத்தை இணைத்து ’நீங்க இப்போதைக்கு குடும்பஸ்தன் ஆக மாட்டீங்க’ என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.