Home /News /entertainment /

ரஜினியை வைத்து நான் இயக்கும் படம் ரூ.1,000 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும்.. சொன்னவர் யார் தெரியுமா?

ரஜினியை வைத்து நான் இயக்கும் படம் ரூ.1,000 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும்.. சொன்னவர் யார் தெரியுமா?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

rajinikanth | " அந்த போலி செய்தியை எழுதியவன் ஒருநாள் என் முன்னால் வருவான். நீங்கள் அந்த நாளுக்காக காத்திருங்கள். "

ரஜினி படத்தை இயக்க விருப்பமில்லை என்று பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியதாக ஒரு செய்தி ஆன்லைன் பத்திரிகை ஒன்றில் வெளியானது. அது போலியான செய்தி. ஆறு வருடங்கள் கடந்த பிறகும் அந்த போலி செய்தி தன்னை வேட்டையாடுவதாக அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். அப்படி என்னதான் நடந்தது?

2015 இல் பிரேமம் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தநேரம், ரஜினியை வைத்து படம் இயக்க விருப்பமில்லை என்று அல்போன்ஸ் புத்திரன் கூறியதாக ஒரு செய்தி வெளியாகி வைரலானது. அல்போன்ஸ் புத்திரனுக்கு அதிர்ச்சி. அவர் அப்படி எதுவுமே கூறவில்லை. பிரேமத்துக்குப் பிறகு ரஜினியை வைத்து படம் செய்யலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இப்படியொரு செய்தி வெளியாகியிருக்கிறது.

செய்தி வைரலானதைத் தொடர்ந்து ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அல்போன்ஸ் புத்திரனை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். அதற்கு அவர், பிரேமம் வெளியான பிறகு இதுவரை யாருக்கும் பேட்டியே தரவில்லை. அது போலி செய்தி என்பதை விளக்கியுள்ளார். அவர் மூலமாக விஷயம் ரஜினியின் காதுகளையும் எட்டியிருக்கிறது.

இதையும் படிங்க.. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியே போவது யார்? வெளியான தகவல்!

ஆறு வருடங்களுக்குப் பிறகு தனது கோல்ட் படத்துக்காக ஒரு நடிகரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு இளம் இயக்குனர், ரஜினியை வைத்து படம் செய்ய விருப்பமில்லை என்று கூறியதாக அல்போன்ஸ் புத்திரனிடம் கூறியுள்ளார். 2015 இல் இருந்து அந்த வதந்தி என்னை தொடர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டிருப்பவர். "நான் விரும்புகிறபடி ரஜினியை இயக்க முடிந்தால் அந்தப் படம் ரூ.1,000 கோடிகளுக்கு மேல்  வசூலிக்கும். அரசுக்கும் வரி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். (ரஜினியை இயக்க முடியாமல் போனால்) எனக்கும், ரஜினிக்கும், ரசிகர்களுக்கும், அரசுக்கும்தான் இழப்பு. அந்த போலி செய்தியை எழுதியவன் ஒருநாள் என் முன்னால் வருவான். நீங்கள் அந்த நாளுக்காக காத்திருங்கள்.

இதையும் படிங்க.. லாரி டிரைவரின் மகன் நான்.. செம்பருத்தி சீரியல் நடிகரின் உருக்கமான கதை!

ரஜினியை வைத்து நான் இயக்கும் படத்தை பார்க்க விரும்புகிறவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள், எப்போதும் போல" என குறிப்பிட்டுள்ளார். அல்போன்ஸ் புத்திரன் உண்மையான ஆதங்கத்தில் சொல்கிறாரா இல்லை கலாய்க்கிறாரா?



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Rajinikanth

அடுத்த செய்தி