Home /News /entertainment /

மரணம் குறித்து முன்பே பதிவிட்ட பிரதாப் போத்தன்! வைரலாகும் கடைசி ஃபேஸ்புக் பதிவு

மரணம் குறித்து முன்பே பதிவிட்ட பிரதாப் போத்தன்! வைரலாகும் கடைசி ஃபேஸ்புக் பதிவு

நடிகர் பிரதாப் போத்தன்

நடிகர் பிரதாப் போத்தன்

நேற்று இரவு பிரதாப் வெளியிட்ட அந்த பதிவில் காதல், மரணம் குறித்து பேசியுள்ளார்.

    நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் மறைவு சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பிரதாப் போத்தனின் கடைசி ஃபேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு அவர் வெளியிட்ட அந்த பதிவில் காதல்,  மரணம் குறித்து பிரதாப் பேசியுள்ளார்.

    ’அழியாத கோலங்கள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நடிகர் பிரதாப் போத்தன். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி இதுவரை 11 படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவுக்கு இவர் ஆற்றிய கலை சேவை ஏராளம். இவரின் இயக்கத்தில் வெளியான ஜீவா, வெற்றிவிழா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை புரிந்துள்ளன.

    பிரதாப் போத்தன் மறைவுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி

    69 வயதாகும் பிரதாப் போத்தன் சென்னையில் வசித்து வந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் தூக்கத்திலேயே பிரதாப் காலமானார் என்ற செய்தி வெளியானது. இவரின் இழப்பு சினிமாவில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமில்லை அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலியும் செய்து வருகின்றனர்.





    இந்த நேரத்தில் நேற்று இரவு பிரதாப் கடைசியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று இரவு 9.30 மணியளவில் பிரதாப் போத்தன் தனது ஃபேஸ்புக்கில் 3 விதமான பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் காதல், மரணம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    முதல் பதிவில், ”சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். அதை நான் காதல் என்பேன்’ என்று ஏஏ மில்னே வரிகளை குறிப்பிட்டு பதிவை வெளியிட்டு இருக்கிறார். மற்றொரு பதிவில் ஜார்ஜ் கார்களின்  வரிகளை குறிப்பிட்டு “மரணம் நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது” என தெரிவித்துள்ளார். இறப்பதற்கு முன்பு கடைசியாக பிரதாப் தனது ஃபேஸ்புக்கில் காதல், மரணம்,  பற்றி குறிப்பிட்டு வெளியிட்டு இருக்கும் இந்த பதிவுகள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Death, Kollywood, Tamil Cinema

    அடுத்த செய்தி