Home /News /entertainment /

சினிமாவும் பிரதாப் போத்தனும்.. உருகும் திரைப்பிரபலங்கள்!

சினிமாவும் பிரதாப் போத்தனும்.. உருகும் திரைப்பிரபலங்கள்!

பிரதாப் போத்தன்

பிரதாப் போத்தன்

பிரதாப் போத்தன் ஒவ்வொரு விஷயத்தையும் சிறந்த முறையில் சொல்லிக் கொடுக்கும் மனிதர் என நடிகர் கார்த்தி புகழாரம்.

மறைந்த பிரதாப் போத்தனை பற்றி புகழ்ந்து தள்ளும் சினிமா நட்சத்திரங்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளரும்,  நடிகருமான கார்த்தி மறைந்த இயக்குனர் பிரதாப் போத்தன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.  அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் ஒரு சண்டைக் காட்சி முழுவதும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக் கொடுக்கும் மனிதர்.  அவரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது என கூறினார்.

pratap pothen death kollywood celebrities shared about pratap pothen ciema ideas karthi prabbhu
பிரதாப் போத்தன் இல்லம்


அதேபோல் நடிகர் பிரபு பேசுகையில் பிரதாப் போதனை பார்த்து அப்போதை நடிகர்களுக்கு பொறாமையாக இருக்கும். அந்த அளவிற்கு ஸ்டைலாக உடை அணிவார். ஸ்டைலாக படம் எடுப்பார், பேசுவார். மை டியர் மார்த்தாண்டன் திரைப்படத்தில் நான் அணிந்த உடை அனைத்தும் பிரதாப் போத்தனின் ஸ்டைல்கள். நல்ல மனிதர், எளிமையாக பழகக் கூடியவர். பிரதாப் போத்தன்  இழப்பிற்கு அவரின்  குடும்பத்தினருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவேன் என தெரியவில்லை என உருக்கத்துடன் பேசினார்.

pratap pothen death kollywood celebrities shared about pratap pothen ciema ideas karthi prabbhu
நடிகர் கார்த்தி, நடிகர் பிரபு செய்தியாளர் சந்திப்பு


அத்துடன் வெற்றி விழா திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் நடிக்க வாய்ப்பு வழங்கினார், அவருடன் நடனம் ஆடவும் பிரதாப்  போத்தனே காரணம் எனவும் பிரபு தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Kollywood celebrities, Tamil Cinema

அடுத்த செய்தி