ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு… அப்டேட் வெளியிட்ட சிம்ரன்

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு… அப்டேட் வெளியிட்ட சிம்ரன்

அந்தகன் படத்தில் பிரசாந்த் - சிம்ரன்

அந்தகன் படத்தில் பிரசாந்த் - சிம்ரன்

இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. சில காரணங்களால், படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சூப்பர் ஹிட் இந்தி படமான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடித்து வருகிறார். அந்தகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

  இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

  இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற முன்னணி நடிகர்கள் பலர் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்த ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருந்தார்.

  பாலிவுட்டில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியிருந்தது. ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார்

  இந்தியில் வசூலை அள்ளிக் குவிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ – படக்குழுவினர் உற்சாகம்

  இந்த திரைப்படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்குவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால், படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார்.

  இந்த நிலையில் அந்தகன் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சிம்ரன் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

  தங்கம் போல் மின்னும் ஜான்வி கபூர்..! வைரல் போட்டோஸ் இதோ

  அந்தகன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வின்னர் படத்திற்கு பின்னர் சொல்லிக் கொள்ளும்படியாக பிரசாந்திற்கு எந்த படமும் அமையவில்லை. அந்தகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரசாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood