Home /News /entertainment /

நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?

நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?

பிரசாந்த்

பிரசாந்த்

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை 2005-ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரசாந்த்.

    நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகன் பிரசாந்த் தனது 17 வயதில் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே ஹிட்டானதால் பல டைரக்டர்களும் பிரசாந்த்தை தேடி வந்து வாய்ப்பு கொடுத்தனர். அன்றைய தினத்துக்கு விஜய், அஜித் என தற்போதைய முன்னணி நடிகர்களை ஓரம் கட்டும் அளவுக்கு பிரசாந்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.

    பிரசாந்த் நடிப்பில் வெளியான வண்ண வண்ண பூக்கள், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    ட்விட்டரில் தனுஷ் பெயர் நீக்கம்... அப்பா பெயரை இணைத்துக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

    தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை 2005-ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரசாந்த். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். ஆனால் இந்தத் திருமணம் வெகு விரைவிலேயே விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் பிரசாந்த் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

    சாபம் விட்ட எல்லாருக்கும் நன்றி... விஜய் டிவி பாவம் கணேசன் நவீன் மனைவி கண்ணீர்

    தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அப்பா தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த். இந்நிலையில் தற்போது 48 வயதாகும் பிரசாந்துக்கு இரண்டாவது திருமணம் செய்ய தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இந்தாண்டு இறுதிக்குள் அவரின் திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Prashanth, Tamil Cinema

    அடுத்த செய்தி