• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Prakash Raj: கன்னடர்-தெலுங்கர் இனப்பிரச்னையில் மாட்டிக் கொண்ட பிரகாஷ்ராஜ்

Prakash Raj: கன்னடர்-தெலுங்கர் இனப்பிரச்னையில் மாட்டிக் கொண்ட பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் கன்னடர் தான், தெலுங்கர் அல்ல. ஆனால், இங்கு ஒரு கிராமத்தை அவர் தத்தெடுத்து அனைத்து வசதிகளையும் செய்துத் தருகிறார்.

  • Share this:
    கன்னடரா இல்லை தெலுங்கரா என்ற இனப் பிரச்சனையில் பிரகாஷ்ராஜை இழுத்துவிட்டிருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகில் இதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

    பிறப்பால் கன்னடராக இருந்தாலும் தெலுங்கு, தமிழ் மொழிகளை அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களை விட துல்லியமாகவும் தெளிவாகவும் பேசக்கூடியவர் பிரகாஷ்ராஜ். அரசியல் சிந்தனைகளையும் தனது மாநிலம், தனது மொழி என சுருக்கிக் கொண்டவர் அல்ல. இந்த பீடிகை எதற்கு என்றால், நடக்கவிருக்கும் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவும், நடிகை ஜீவிதாவும் நிற்கிறார்கள். மும்முனைப் போட்டியில் நிஜமான போட்டி பிரகாஷ்ராஜுக்கும், விஷ்ணு மஞ்சுவுக்கும் தான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    யார் வெற்றி பெறுவார் என்பது சொல்ல முடியாத நிலையில், பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர், அவரை தெலுங்கு நடிகர்கள் சங்கத் தலைவராக ஏற்பதா என்ற இனப்பிரச்சனையைத் தூக்கி நடுவில் போட்டார்கள் சிலர். இப்போது அது பற்றிக் கொண்டு எரிகிறது. பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாக தயாரிப்பாளரும், நடிகருமான பாண்ட்லா பிரகாஷ் போன்றோர் குரல் கொடுத்துள்ளனர்.

    பிரகாஷ்ராஜ் கன்னடர் தான், தெலுங்கர் அல்ல. ஆனால், இங்கு ஒரு கிராமத்தை அவர் தத்தெடுத்து அனைத்து வசதிகளையும் செய்துத் தருகிறார். தெலுங்கு மக்களுக்காக சேவை செய்கிற அவரை கன்னடர் என்று பிரித்துப் பேசுவது தவறு. கலைஞர்களை மொழியை வைத்து பிரிப்பது சரியில்லை என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

    எனினும் கன்னடர் என்ற இன வேற்றுமை பிரகாஷ்ராஜின் வெற்றிக்கு வேகத்தடைதான் என்கிறார்கள் தெலுங்கு திரையுலகில்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: