Home /News /entertainment /

நடிகை திரிஷா மற்றும் பிரகாஷ்ராஜை கவர்ந்த ரசிகரின் மீம் வீடியோ...

நடிகை திரிஷா மற்றும் பிரகாஷ்ராஜை கவர்ந்த ரசிகரின் மீம் வீடியோ...

வீடியோவில் பிரகாஷ் ராஜ் - த்ரிஷா

வீடியோவில் பிரகாஷ் ராஜ் - த்ரிஷா

வயதான பிரகாஷ்ராஜ் தன் காதலி த்ரிஷாவை நினைத்துப் பார்ப்பது போல வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கில்லி படம் காட்சியை கொண்டு ஒரு ரசிகர் உருவாக்கிய வீடியோவை பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் சமூக வலைதளமான ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் நடிகை திரிஷாவை, நடிகர் பிரகாஷ்ராஜ் காதலிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றன.

அந்தக் காட்சிகள் இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற நடிகர் பிரகாஷ்ராஜின் காட்சியை, கில்லி பட காட்சியுடன் இணைத்து ஒரு ரசிகர் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

விக்னேஷ் சிவனுக்கு வேற லெவல் பிறந்தநாள் சர்பிரைஸ் கொடுத்த நயன்தாரா!

அதில் வயதான பிரகாஷ்ராஜ் தன் காதலி த்ரிஷாவை நினைத்துப் பார்ப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.  இதை பகிர்ந்த பிரகாஷ்ராஜ்,  வீடியோவை உருவாக்கியவர் யார் என்று தெரியவில்லை.



ஆனால் இந்த வீடியோ என்னுடைய நாளை சிறப்பாக்கியுள்ளது உள்ளது என பதிவிட்டுள்ளார்.



அதை நடிகை திரிஷா தன்னுடைய ட்விட்டர்  பகுதியில் கண்ணீர் விட்டு சிரிக்கும் ஸ்மைலியுடன் பகிர்ந்து உள்ளார். அவர்களின் பதிவை ரசிகர்கள் ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகின்றனர்.
Published by:Musthak
First published:

Tags: Actress Trisha, Prakash raj

அடுத்த செய்தி