முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 11 வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்...!

11 வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்...!

விஜய், பிரகாஷ்ராஜ்

விஜய், பிரகாஷ்ராஜ்

இதற்கு முன் விஜய்யின் கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு படங்களில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்துள்ளார். வில்லுதான் கடைசிப்படம்.

  • 1-MIN READ
  • Last Updated :

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் விஜய் படத்தில் நடித்து 11 வருடங்களாகிறது என்பது ஆச்சரியமான உண்மை. நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய்யும், பிரகாஷ்ராஜும் ஒன்றிணைகிறார்கள்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்கள் இல்லை. மலையாளம், இந்தியிலும்கூட நடித்துள்ளார். ஆனால், முதலில் சொன்ன மூன்று மொழிகளில் பல பத்து வருடங்களாக அவர்தான் ஆல்ரவுண்டர். அவருக்கு இணையான ஒரு மாற்று நடிகர் இன்னும் அமையவில்லை

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 65 வது படம். இதையடுத்து வம்சி பைதிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். தில் ராஜு தயாரிப்பு. இன்றைய தேதியில் இந்த இரு விவரங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன

விஜய்யின் இந்த 66 வது படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். தெலுங்கு நடிகர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரகாஷ்ராஜ் அந்த வேலைகளில் பிஸியாக உள்ளார். அடிப்படையில் கன்னடரான அவர் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் போட்டியிடுவதா என பலர் சர்ச்சை கிளப்பியிருக்கும் நிலையில், இந்தத் தகவலை அவர் பகிர்ந்துள்ளார்

Also read... சூர்யா படத்துக்கு 'ஏ' சான்றிதழ் - குழந்தைகள் பார்க்க அனுமதியில்லை!

இதற்கு முன் விஜய்யின் கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு படங்களில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்துள்ளார். வில்லுதான் கடைசிப்படம். அதன் பிறகு சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு விஜய்யின் 66 வது படத்தில் நடிக்கிறார். இதில் ஒரு சுவாரஸியமான அம்சம், இதுவரை விஜய் படங்களில் பிரகாஷ்ராஜ் வில்லனாகத்தான் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு நேர்மறையான வேடமாம்

First published:

Tags: Actor Vijay, Prakash raj