Home /News /entertainment /

31 தொழிலாளர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் - நடிகர் பிரகாஷ்ராஜ்

31 தொழிலாளர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் - நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ்

வீட்டுக்குச் செல்ல முடியாத தொழிலாளர்கள் 31 பேரை தனது வீட்டில் வைத்து பராமரித்துக்கொண்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா பரவலைத் தடுப்பதற்கான இந்த நாடு தழுவிய ஊரடங்கில், தனது பண்ணை வீட்டில் தங்க வைத்திருந்த 31 வெளிமாநிலத் தொழிலாளர்களை பாதுகாப்பாக அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

    பிரகாஷ்ராஜ் அறக்கட்டளையின் மூலமாக ஆயிரம் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திருப்பதாகவும், வீட்டுக்குச் செல்ல முடியாத தொழிலாளர்கள் 31 பேரை தனது வீட்டில் வைத்து பராமரித்துக்கொண்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்த அவர், தற்போது அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கான வேலைகளையும் தொடங்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

    வீட்டுக்குச் செல்ல முடியாமல் தவிப்பவர்களை, வெளிமாநிலத் தொழிலாளர்களை பாதுகாக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் பிரகாஷ்ராஜ்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Gunavathy
    First published:

    Tags: Actor Prakashraj, CoronaVirus, Lockdown

    அடுத்த செய்தி