ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'வாரிசு' கிளைமேக்ஸ்ல விஜய்யோட நடிப்ப பார்த்தா... - சீக்ரெட் சொன்ன பிரகாஷ் ராஜ்!

'வாரிசு' கிளைமேக்ஸ்ல விஜய்யோட நடிப்ப பார்த்தா... - சீக்ரெட் சொன்ன பிரகாஷ் ராஜ்!

பிரகாஷ் ராஜ் - விஜய்

பிரகாஷ் ராஜ் - விஜய்

Varisu Vijay நடிகர் விஜய்யின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு இசையமைப்பாளர் தமன் புதிய இசையை கொடுத்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கில்லி, சிவகாசி, போக்கிரி என விஜய் - பிரகாஷ் ராஜ் காம்போ ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரைட். கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் இந்த காம்போவை மிஸ் செய்துவந்தனர். இந்த நிலையில் வாரிசு படம் அந்த வருத்தத்தை போக்கியிருக்கிறது.

வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். இந்த நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ், நடிகர் விஜய்யின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு இசையமைப்பாளர் தமன் புதிய இசையை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் வந்த சிறப்பான ஆல்பங்களில் ஒன்று. தளபதி விஜய் நம்மை ஒரே குடும்பமாக உணர செய்கிறார்.

இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் விஜய்யின் நடிப்பை பார்த்து மிக எமோஷனலாவீர்கள். வாழ்க்கை குறித்த நேர்மறை எண்ணங்களை வாரிசு படம் கொடுக்கும். இப்போதைய தலைமுறையினருக்கு அது மிகவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, குஷ்பு, சரத்குமார், பிரபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

First published:

Tags: Actor Prakashraj, Actor Thalapathy Vijay, Varisu