• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "அன்பு மனைவிக்கு நன்றி" - பிரகாஷ்ராஜின் நெகிழ்ச்சி பதிவு!

"அன்பு மனைவிக்கு நன்றி" - பிரகாஷ்ராஜின் நெகிழ்ச்சி பதிவு!

போனி வர்மா பிரகாஷ்ராஜ்

போனி வர்மா பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் தற்போது அண்ணாத்த, பொன்னியின் செல்வன், எனிமி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், புஷ்பா உள்ளிட்ட தெலுங்குப் படங்களிலும், கேஜிஎஃப் சேப்டர் 2 உள்ளிட்ட கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். 

  • News18
  • Last Updated :
  • Share this:
தனது 11 வது ஆண்டு திருமணநாளை முன்னிட்டு நெகிழ்ச்சி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். அதில் அவர் தனது மனைவிக்கு நன்றி கூறியுள்ளார். 

கர்நாடகாவைச் சேர்ந்தவரான பிரகாஷ்ராஜ் நடிகராக அறிமுகமானது பாலசந்தரின் டூயட் திரைப்படத்தில். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனது ஆரம்பகால திரைவாழ்க்கையில் சிரமத்தை சந்தித்தபோது உதவிய நடிகை லலிதா குமாரியை பிரகாஷ்ராஜ் 1994 இல் திருமணம் செய்து கொண்டார். லலிதா குமாரி நடிகை டிஸ்கோ சாந்தினியின் தங்கை. இவர்களின் திருமண வாழ்க்கை 2009 இல் முடிவுக்கு வந்தது. பிரகாஷ் ராஜுக்கும் நடன இயக்குனர் போனி வர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட காதலே இதற்கு காரணம்

Also read... உருவாகிறது தேவர் மகன் 2 - விக்ரம், விஜய் சேதுபதி நடிக்கலாம்!

பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டபின் 2010 இல் போனி வர்மா பிரகாஷ்ராஜ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இன்று அவர்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாள். அதனை முன்னிட்டு, ட்விட்டரில் ஒரு பதிவை பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார்



சிறந்த தோழியாகவும், காதலியாகவும், சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருக்கிற தனது அன்பு மனைவிக்கு அதில் பிரகாஷ்ராஜ் நன்றி கூறியுள்ளார்



பிரகாஷ்ராஜ் தற்போது அண்ணாத்த, பொன்னியின் செல்வன், எனிமி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், புஷ்பா உள்ளிட்ட தெலுங்குப் படங்களிலும், கேஜிஎஃப் சேப்டர் 2 உள்ளிட்ட கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: