கொரோனா : நான் சேர்த்து வைத்த பணம்... இன்னும் செய்வேன் - பிரகாஷ்ராஜுக்கு குவியும் பாராட்டு

கொரோனா : நான் சேர்த்து வைத்த பணம்... இன்னும் செய்வேன் - பிரகாஷ்ராஜுக்கு குவியும் பாராட்டு
நடிகர் பிரகாஷ்ராஜ்
  • Share this:
கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணியாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுத்த பிரகாஷ் ராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் பிரகாஷ்ராஜ், “நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன்.

இந்த கட்டுப்பாடு காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும் சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் குறைந்தது அரை சம்பளத்தைத் தரத் தேவையான வழிமுறையை இறுதி செய்தேன். இன்னும் முடியவில்லை. என்னால் முடிந்த வரை இன்னும் செய்வேன்.


உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க்கைக்கு நாம் திரும்பத் தர வேண்டிய நேரமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது எனத் தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.தமிழ் சினிமாவில் கடந்த 19-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் பெஃப்சியில் பணியாற்றும் பத்தாயிரத்துக்கும் அதிகமான தினக்கூலி ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தினர் ரூ.10 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.

மேலும் படிக்க: கொரோனா: சினிமா தொழிலாளர்களுக்கு சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவிFirst published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்